சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் உயிரிழந்தார். வேலியில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரம் பாய்ந்து இளைஞர் ரஞ்சித் உயிரிழந்தார். விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த ஜெபமாலை ராஜ் என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.