ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; 25 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஆட்டோ சங்கத்தினர் அவர்களின் கோரிக்கையை கூறியுள்ளனர். கோரிக்கைகளை பரிசீலித்து சென்னை நகர ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பான கும்தா மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பைக் டாக்ஸியால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது என அவர் கூறினார்.

The post ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: