மகளிர் வாள்வீச்சு போட்டியில் அபாரம்; தங்கம் வென்ற தமிழகம்: தேசிய விளையாட்டு போட்டிகளில் 6ம் இடம்

டேராடூன்: தேசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று மகளிர் வாள் வீச்சு பிரிவில் தமிழகம் அபாரமாக ஆடி தங்கப் பதக்கம் வென்றது.  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வந்தன. கடைசி நாளான நேற்று மகளிர் வாள்வீச்சு (ஃபென்சிங் – ஃபாயில் பிரிவு) இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதின.

இதில் சிறப்பாக ஆடிய தமிழக வீராங்கனைகள் 45-38 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். அரியானா வெள்ளி, மணிப்பூர், சத்தீஸ்கர் அணிகள் வெண்கலப் பதக்கங்களை வென்றன. வாள் வீச்சு போட்டிகளில் அரியானா அணிக்கு மொத்தம் 5 தங்கம் கிடைத்தன. தமிழகம் 4, சர்வீசஸ் அணி 2 தங்கம் வென்றன.

தேசிய விளையாட்டு போட்டிகளின் முடிவில், சர்வீசஸ் அணி, 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா 54, அரியானா 48, மத்தியப்பிரதேசம் 34, கர்நாடகா 34 தங்கப் பதக்கங்களுடன் 2 முதல் 5 இடங்களை பிடித்தன. தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களை வென்று 6ம் இடம் பிடித்துள்ளது.

The post மகளிர் வாள்வீச்சு போட்டியில் அபாரம்; தங்கம் வென்ற தமிழகம்: தேசிய விளையாட்டு போட்டிகளில் 6ம் இடம் appeared first on Dinakaran.

Related Stories: