உத்திரமேரூர், மானாம்பதி அரசு பள்ளிகளில் ரூ.8.47 கோடியில் கூடுதலாக 36 வகுப்பறை கட்டிடங்கள்: க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

மதுராந்தகம்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1971 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதுேபால் உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் 1200 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பு அறைகள் கட்ட அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி மனாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் 24 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜை வளாகங்களில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்து, பள்ளி வகுப்பறைகளுக்கான கூடுதல் கட்டிட பணியை துவக்கி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் பணி குறித்து கேட்டறிந்து 12 மாதங்களுக்குள் பணியை முடித்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.

மேலும் ரூ.8.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள வகுப்பறைகளால் மாணவர்களுக்கு மிகுந்த பயன் ஏற்படும் என ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணை தலைவர் இளமதி கோவிந்தராஜ், கவுன்சிலர் சுகுணா சுந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ராதா நடேசன், சாந்தமூர்த்தி, உதய பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

The post உத்திரமேரூர், மானாம்பதி அரசு பள்ளிகளில் ரூ.8.47 கோடியில் கூடுதலாக 36 வகுப்பறை கட்டிடங்கள்: க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: