நேற்று முதல் இன்று அதிகாலை வரை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான காதலர்கள் குவிந்தனர். இதனால் ரோஜாக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 20 வண்ண பூக்களின் கொண்ட ஒரு பஞ்ச் ரோஜா ரூ.500ல் இருந்து 600க்கும், 20 பூக்கள் கொண்ட கட்டு ரோஜா ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், நோபிள்ஸ் ரக ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்ச் ரோஜா ரூ.350ல் இருந்து ரூ.450க்கும், ரெட் ரோஜா ரூ.450ல் இருந்து ரூ.550க்கும், ஜர்பூரா ரோஜா ரூ.150ல் இருந்து ரூ.250க்கும், தாஜ்மகால் ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று காலை வரை கோயம்பேடு மார்க்கெட்டில் காதலர் தின பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் அதனை சிறுது கூட கவலைப்படாமல் ரோஜாக்களை அள்ளி சென்றனர். இதனால் வியாபாரமும் சூடுபிடித்து அமோக லாபம் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு காதலர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்படுவதால் வியாபாரம் அமோகமாக இருந்தது’ என்றார்.
The post இன்று காதலர் தினம் கொண்டாட்டம்; 20 வண்ண பூக்கள் கொண்ட ரோஜா ரூ.600க்கு விற்பனை: கோயம்பேட்டில் காதலர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
