தேனி: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு இணையான அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று ஏற்கனவே ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியினுடைய தேர்தல் நிலை பற்றியும், அவர்களது சட்ட திட்டங்கள், விதிமுறைகள் தொடர்பாக பிரச்னை என்றால், அதை தீர்த்து வைப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது இன்று நிரூபணமாகி உள்ளது.’’ என்று கூறினார்.
The post மீண்டும் தர்மமே வெல்லும்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து appeared first on Dinakaran.