இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பைக்கில் 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திருப்பதியின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். இதனால் திருப்பதி வீட்டு கதவை திறந்துள்ளார். அப்போது 2 பேரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருப்பதியை சரமாரி வெட்டினர். இதனால் அலறி கூச்சலிட்டபடி அங்குள்ள அறைக்குள் ஓடினார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி வசந்தாவையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வசந்தா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் செல்வதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பி விட்டனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் மயங்கி கிடந்த திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருப்பதிக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வழிப்பிரச்னை இருந்தது தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத்தலைவரின் மனைவி வெட்டிக்கொலை: 6 பேரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.