இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். சிபிசிஐடி போலீசார், இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு செய்திருந்தனர். இதனையடுத்து 3நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பாரதி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்போடு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
The post சமூக ஆர்வலர் கொலையில் கைதான 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.
