வனத்துறையினர் சென்று பார்த்தபோது மரங்கள், செடிகள், கொடிகள் சாய்ந்து போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆண் யானை ஒன்றும் இறந்து கிடந்தது. மதுரையில் இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், ‘‘பெண் யானைக்காக 2 காட்டு ஆண் யானைகள் கடுமையாக சண்டை போட்டுள்ளன.
சுமார் 5 மணி நேரம் வரை இந்த சண்டை நடந்திருக்கலாம். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சண்டை நடந்ததற்கான தடயங்கள் உள்ளன. இதில் 50 வயது ஆண் யானை படுகாயம் அடைந்து இறந்திருக்கிறது. யானைகள் சண்டை நடைபெற்ற போது காட்டுக்குள் நீண்ட நேரம் பயங்கரமாக பிளிறல் சத்தம் கேட்டதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்’’ என தெரிவித்தனர்.
The post ஒரு பெண்ணுக்காக 2 ஆண் யானைகள் 5 மணி நேரம் சண்டை: பரிதாபமாக பலியான சோகம் appeared first on Dinakaran.
