இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 9ம் தேதி வரை செலுத்தலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம்.
The post க்யூட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.
