இவ்விவகாரம் ெதாடர்பாக துர்க்கப்பா சதாசிவ நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் தான் ஆளாக்கப்பட்டதாக துர்க்கப்பா குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது பணிநீக்கம் குறித்து இந்திய அறிவியல் மையமோ, அதன் அறங்காவலர் குழுவில் இருந்த இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட யாரும் எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து கோவிந்தன் ரங்கராஜன், சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரின் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post பழங்குடியினத்தை சேர்ந்தவர் அளித்த புகாரில் ‘இன்போசிஸ்’ நிர்வாகி உட்பட 18 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
