ஒடிஷா: ஒடிசா மாநிலம் கியோஞ்சரில் ரயிலில் பயணித்த நம்ரதா பெஹரா (20) என்ற இளம் பெண் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் வெளியூர் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தி உடலை மீட்டுள்ளார்.