திடீரென சாலையில் வந்து நிற்கும் இந்த யானையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி அங்கு நிற்கும் சரக்கு லாரிகளின் பின்புறம் கட்டப்பட்டுள்ள தார்ப்பாய்களை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சாலையில் வீசி உணவுப் பொருட்களை குறி வைத்து தேடி வருகிறது. இதே போல் நேற்றிரவு சரக்கு லாரி ஒன்றை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சாலையில் வீசி, உணவுப் பொருட்களை தேடியது. இவ்வாறு அடிக்கடி நடைபெற்ற வருவதால் இரு மாநில வனத்துறையினர் கண்காணித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த காட்டு யானை: பொருட்களை சாலையில் வீசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.
