சென்னையில் மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.7,340க்கும் விற்பனை!! : நகை வாங்குவோர் அதிர்ச்சி!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000 என்ற நிலையை கடந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பண்டிகை காலம், டாலர் மதிப்பு உயர்வு, அமெரிக்க அதிபர் பதவியேற்பு நெருங்குவது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் பவுனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,720-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.58,640-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கும் விற்பனையாகிறது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.400 உயர்ந்து ரூ. 59,120க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ. 7390க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை பயணிப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.103-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.7,340க்கும் விற்பனை!! : நகை வாங்குவோர் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: