அந்த வகையில், இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எஃப் 15, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 29-ஆம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. என்விஎஸ்-02 பிற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் காண விரும்புவோர், முன்பதிவு செய்ய இஸ்ரோ வேண்டுகோள் விடுத்துள்ளது. https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் இதற்கான நேரம், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
ராக்கெட் ஏவுதலை காண விரும்புவதற்கு விண்ணப்பம் செய்வோர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு வழங்கிய ஏதேனும் ஐடி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தயாராக வைத்திருக்க வேண்டும். நிறுவன முன்பதிவுக்கு நிறுவனத் தலைவரிடமிருந்து கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயமாகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
The post ஜிஎஸ்எல்வி-எஃப் 15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது appeared first on Dinakaran.