சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.60,080க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.60,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. அக்டோபர் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலை இந்த மாதமும் நீடித்து வருகிறது. கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ.200, 15ம் தேதி சவரனுக்கு ரூ.80, 16ம் தேதி சவரனுக்கு ரூ.400, 17-ம் தேதி சவரனுக்கு ரூ.480 என உயர்ந்து சவரன் ரூ.59,600க்கும் விற்பனையானது.

வார இறுதிநாளான 18-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,435க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,480க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (28.01.2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.60,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,510க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 60,080 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிலோ ரூ. 1.04 லட்சமாக உள்ளது.

 

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.60,080க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: