தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு

சென்னை: தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தை அமாவாசை நாளான 29ம் தேதி மற்றும் 31ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும் 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: