உடல் உறுப்பு தானம் பெறுவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதாகவும், உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் இரு வகைப்படும். உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு மாற்று உறுப்பு பொறுத்துவதை உடல் உறுப்பு தானம் எனக் கூறுகிறோம். உடல் உறுப்புகள் இரண்டு வகையாக பெறப்படுகின்றன. உயிருடன் வாழ்பவர்களிடம் நோயாளிக்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து உடல் உறுப்புகளை பெறுவது ஒரு திட்டம். இந்த திட்டத்தில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பெற முடியும்.
மற்றொரு வகையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை அவரின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தும் முறையாகும். இரண்டு திட்டங்களிலும் தமிழ்நாடு நல்ல நிலையில் உள்ளது.
உடல் உறுப்பு கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்களிடம் பரவலாக விழிப்புணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் கடை கோடி மக்களுக்கும் விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்.
மூளைச்சாவு உறுப்புக் கொடைத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், இந்திய அளவில், ஓராண்டில், ஒரு மாநிலத்தில் மட்டுமே இந்த அளவுக் கொடை இது வரையில் நிகழ்ந்ததில்லை.இம்மாபெரும் சாதனை சாத்தியமானதற்கான காரணம், நம்முடைய முதல்வர் அவர்களின் “உடல் உறுப்பு தானம் செய்தோரின் திருவுடல்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும்”எனும் உன்னதமான வரலாற்று சிறப்பு மிக்க ‘அரசு ஆணையே’ ஆகும்…
The post உறுப்புக்கொடை என்ற உன்னதத் திட்டம் 2024ம் ஆண்டில் புதிய உச்சம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.