சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா: விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கே.நடராசன் படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்;

பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா சீமான்: திருமாவளவன்
சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற கேள்வி எழுகிறது. பெரியாரை விமர்சித்து பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற சீமான் முயற்சிக்கிறாரா என்ற ஐயமும் எழுகிறது. தந்தை பெரியாரை சம காலத்தில் உயர்ஜாதி அமைப்புகள் வீழ்த்த முயற்சித்தும் முடியவில்லை.

பாசிச அரசியலை நோக்கி சீமான் செல்கிறார்: திருமாவளவன்
சீமானின் அரசியல், இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளைக் கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

ஆளுநரின் பேச்சு வலதுசாரி அரசியல் நாடகம்: திருமாவளவன்
ஆளுநர் ரவி மீண்டும் மீண்டும் அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தலித்துகள் முதல்வராக வர வேண்டும் என ஆளுநர் பேசுவது வலதுசாரி அரசியல் நாடகம். ஆளுநரின் பேச்சு அப்பாவி தலித்துகளை ஈர்க்கும் சூழ்ச்சியாகும் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

The post சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா: விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: