சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். கிராம சபைக் கூட்டம் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.