மனித – வனவிலங்கு மோதல் – இழப்பீடு வழங்க கூடுதல் நிதி


சென்னை: மனித – வனவிலங்கு மோதலுக்கு இழப்பீடு வழங்க கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2024-25க்கான வனவிலங்கு – மனித மோதல் வழக்குகளுக்கு இழப்பீடு தர ஏற்கனவே ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதலாக ரூ.5 கோடி வழங்க அரசுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் கடிதம் அனுப்பி இருந்தார். கடிதத்தை பரிசீலித்து வனவிலங்கு – மனித மோதலுக்கு இழப்பீடு தர கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,

The post மனித – வனவிலங்கு மோதல் – இழப்பீடு வழங்க கூடுதல் நிதி appeared first on Dinakaran.

Related Stories: