சென்னையில் இருந்து புறப்பட்ட ஐதராபாத் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 4.05 மணிக்கு புறப்பட்டது. இதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்நிலையில், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, விமானம் புறப்பட்ட இடத்துக்கே நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்லும். இல்லையேல் பயணிகள் அனைவரும், மாற்று விமானம் மூலம் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கை காரணமாக 142 பயணிகள் உள்பட 148 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

The post சென்னையில் இருந்து புறப்பட்ட ஐதராபாத் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: