திருமண ஆவணப்பட காட்சி விவகாரம் நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் வழக்கு: ஐகோர்ட்டில் 22ம் தேதி இறுதி விசாரணை

சென்னை: நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில் நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனிமேல் கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

The post திருமண ஆவணப்பட காட்சி விவகாரம் நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் வழக்கு: ஐகோர்ட்டில் 22ம் தேதி இறுதி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: