சென்னை: குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காலி பணியிடங்கள் எண்ணிக்கையை அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி அதிகரித்து வந்தது. இதனால் குரூப் 4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை நேற்று மேலும் அதிகரித்தது. அதாவது 41 பணியிடங்களை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்ந்துள்ளது.
The post குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 41 இடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.