தொடர்ந்து, அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை புத்தகக் காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்டேன். பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். பாஜவை பொறுத்தவரை தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவை அறிவிப்போம். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி கடிவாளம் போட்டு தேர்தலை நடத்த வேண்டும்.
ஆளுநர் ஒரு கருத்தை சொல்வதும், மாநில அரசு ஒரு கருத்து சொல்வதும், கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதும் வேறு ஜனநாயகம் முறைப்படி அதை ஏற்றுக் கொள்ளாதது வேறு. தமிழ்தாய் வாழ்த்திற்கு அவர் மரியாதை கொடுத்துள்ளார், தமிழ் கலாச்சாரத்தின் மீது ஆளுநர் மரியாதை வைத்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வராது, அப்படி வந்தால் நானும் அவர்களுடன் சேர்ந்து போராடுவேன். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தை தாண்டுமா என்று தெரியவில்லை. இந்த முறை வெளியில் இருந்து சிறப்பு அதிகாரிகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
The post பாஜவை பொறுத்தவரை தேர்தல் குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவை அறிவிப்போம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.