கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் அயனாவரம் மார்க்கெட் அருகே அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் சிறுசிறு பொட்டலங்களாக சுமார் 75 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஓட்டேரி செல்வ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த அசோக் (29) மற்றும் அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்த ராஜ்கமல் (26) என்பது தெரியவந்தது. இவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அசோக் மற்றும் ராஜ்கமல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்பு என்பவரை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: