போதையில் இருந்த நபர் நடத்துனர் பிரேம்குமாரிடம் இருந்த டிக்கெட் தரும் மிஷினை வாங்கி கீழே போட்டு உடைத்து பிரேம்குமாரையும் தாக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதையில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு மோதிலால் தெருவை சேர்ந்த வீரமணி (30) என்பதும், செங்குன்றம் பகுதியில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து நடத்துனர் பிரேம்குமாரிடம் புகாரை பெற்று, வீரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போதையில் பேருந்தில் ஏறக்கூடாது எனக்கூறிய நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.