அதன்பேரில், போலீசார் கடந்த 4ம் தேதி ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் தனியார் பாரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இளம் பெண்கள் மிகவும் ஆபாசமாக அரைகுறை ஆடைகளுடன் போதையில் நடனமாடிக்கொண்டிருந்தனர். அரசு அனுமதி நேரத்தை கடந்து, இளம்ெபண்களை வைத்து பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய கிழக்கு முகப்பேர் ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பார் உரிமையாளர் தாணு (47), விருதுநகர் மாவட்டம் கிழக்கு சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்த பார் காசாளர் விஜய் அமிர்தராஜ் (38), மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வினோத் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய ஒலிப்பெருக்கிகள், டம்மி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பார் உரிமையாளர் தாணு மீது இதுபோல் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததும், கடந்த மாதம் 27ம் தேதி நீதிமன்ற பினையில் ெவளியே வந்து மீண்டும் இளம்பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
The post ஜாபர்கான்பேட்டையில் இளம்பெண்களை வைத்து பாரில் ஆபாச நடனம்: உரிமையாளர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.