அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த 2 பேரும் தலைமறைவாகினார். இவ்வழக்கில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாத நிலையில், கடந்த 2010ல் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தலைமறைவாக இருந்த குமார், ராஜேஷ் ஆகியோரின் உருவப்படத்தை தயாரித்து அதனை வெளியிட்டும், இணையதளம் மூலமாகவும் தேடி வந்தனர். அப்போது அதே உருவம் கொண்ட 2 பேர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ் என்பவர் பிரதீப் எனவும், குமார் என்பவர் விஷ்ணு எனவும் பெயரை மாற்றிக்ெகாண்டு புதுச்சேரியில் திருமணம் செய்து குழந்தைகளுடன் சேதராப்பட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சொத்துக்களையும் வாங்கி உள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய், 2 குழந்தைகள் கொலை வழக்கில், 19 ஆண்டுகளுக்குபின் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கேரளாவில் காதலி, 2 குழந்தைகளை கொன்ற வழக்கு ஏஐ ெதாழில்நுட்பத்தால் 2 ராணுவ வீரர்கள் கைது: 19 ஆண்டுக்குப்பின் புதுச்சேரியில் சிக்கினர் appeared first on Dinakaran.