அக்காவுடன் தகராறு செய்ததால் கண்ணில் மிளகாய்பொடி தூவி மாமாவை தாக்கிய மைத்துனர்

துரைப்பாக்கம்: புளியந்தோப்பு காந்திநகர் 5வது தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (53), இவருக்கு திருமணமாகி 29 வருடங்கள் ஆகிறது. இவரது 3 பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மனைவி மீனா. கமலக்கண்ணன் மற்றும் மீனா ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மது போதையில் வீட்டிற்கு வந்த கமலக்கண்ணன் தனது மனைவி மீனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது மீனாவின் தம்பி ரஜினி, வீட்டிற்கு வந்து கமலக்கண்ணன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கீழே கிடந்த இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், கமலக்கண்ணனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த ரஜினி (45) என்பவரை கைது செய்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அக்காவுடன் தகராறு செய்ததால் கண்ணில் மிளகாய்பொடி தூவி மாமாவை தாக்கிய மைத்துனர் appeared first on Dinakaran.

Related Stories: