கோவை: சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பியூஸ் மனுஷ், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோவையில் கடந்த மாதம் 19ம் தேதி பாஜவினர் போராட்டம் நடத்தினர். அதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, வேலூரில் இருந்து தொண்டர் ஒருவர் போனில் அழைத்ததாகவும், 2 பேரை கொலை செய்ய இருப்பதாவும், கொலை செய்த பின் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும்படியும் தெரிவித்தாக கூறினார். இதன்மூலம், அவர் கோர்ட்டுக்கு யாராவது சென்றால் கொலை செய்ய வேண்டும் என தூண்டுகிறார். அதேபோல, மத கலவரத்தையும், வன்முறையையும் தனது பேச்சு மூலம் தூண்டி வருகிறார். அவர் மீது கோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்துள்ளேன். அவர் பேசிய அன்றே கோவை மாநகர போலீசாருக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பி இருந்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் நேரில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
The post வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு அண்ணாமலை மீது கமிஷனர் ஆபீசில் புகார் appeared first on Dinakaran.