மதுரை சிறைகளுக்கு காய்கறி வழங்கிய நிறுவனத்தில் சோதனை..!!

மதுரை: சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் 15 ஆண்டுகளாக காய்கறி வழங்கிய நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. கொடுங்கையூரில் உள்ள எஸ்எஸ் டிரேடர்ஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சீனிவாசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 3 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருளுக்கு மூலப்பொருள் வாங்கியது, விற்றதில் முறைகேடு நடந்துள்ளது என அறிக்கை வெளியானது. வழக்கின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 6 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post மதுரை சிறைகளுக்கு காய்கறி வழங்கிய நிறுவனத்தில் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: