கிழக்கு திசை காற்று மாறுபாடு 31ம் தேதி வரை லேசான மழை

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானுக்கு கிழக்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றின் காரணமாகவும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசி வருவதாலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறைவாகவும் இருந்தது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும். 29ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்புள்ளது. 30ம் தேதி தென் தமிழக கடலோரத்திலும், 31ம் தேதி தென் தமிழகத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: