நாகர்கோவிலில் கலைவாணர் வீட்டை தேடி புகைப்படம் எடுத்த கவிஞர் வைரமுத்து


நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அப்போது ஒழுகினசேரியில் கலைவாணர் வாழ்ந்த வீட்டை தேடி கண்டுபிடித்து அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி சென்று வரும்வழியில் என் நீண்ட நாள் ஆசையொன்றை நிறைவேற்றிக்கொண்டேன். நாகர்கோயிலுக்குள் புகுந்து ஒழுகினசேரி எங்கே என்று விசாரித்தேன். அங்கு வந்ததும் கலைவாணர் வீடு எங்கே என்று வினவினேன் நான் காண விரும்பிய கலைவாணர் வீடு கலைந்த கூடுபோல் சிதைந்து கிடந்தது.

 

1941ல் கட்டப்பட்டு ‘மதுரபவனம்’ என்றுபெயரிடப்பட்ட மாளிகைஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது. இந்த மண்ணின் பெருங்கலைஞர் கலைவாணர் நடித்து நடித்து சிரிக்க வைத்தவர்; கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர் அந்த வளாகத்தில் ஒரு நூற்றாண்டு நினைவுகள் ஓடிக் கடந்தன. எத்துணை பெரிய கனவின் மீதும் காலம் ஒரு நாள் கல்லெறிகிறது. கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில். இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

The post நாகர்கோவிலில் கலைவாணர் வீட்டை தேடி புகைப்படம் எடுத்த கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Related Stories: