இருப்பினும் குஷ்புவிற்கு பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட 5 மாதத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பிறகு குஷ்பு பெரிய அளவில் பாஜ கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் “என்னை பாஜ கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவதில்லை, அதனால் நான் பங்கேற்பதில்லை. என்னை ஏன் கூப்பிடவில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்” என பேசியுள்ளார்.
இந்த ஆடியோ வைரலானதையடுத்து, அந்த ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்பதை நான் ஒருபோதும் மறுப்பதில்லை. ஆனால் எனது அனுமதியின்றி பதிவு செய்வதை, அதனை ஏற்க முடியாது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
என்னை ஏன் கூப்பிடவில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்
The post பாஜ நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடுவதில்லை: குஷ்பு குமுறல் appeared first on Dinakaran.