இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை, மண் மற்றும் சேறும் சகதியுமாக உள்ளதால், மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆற்றில் செல்லக்கூடிய நீர் முழுவதும் சாலைக்கு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு கூட கடினமாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்வதாக கூறி கிராம மக்கள் பலர் திடீரென சாலையில் திரண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும், தீர்வு காண முடியாத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
The post குன்னூர் அருகே 15 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க திரண்ட பொது மக்கள் appeared first on Dinakaran.