திருப்பூர், டிச.30: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வாலிபாளையம் பகுதி திமுக, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாலிபாளையம் பகுதி திமுக செயலாளர் முக உசேன் தலைமையில் நடைபெற்ற முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி நாகராசன், தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாகராஜன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபு சிதம்பரம், மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் மஸ்ஊத், வார்டு செயலாளர்கள் முகமது அலி, ரஃபி, சல்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முகாமில் சளி, காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை மட்டுமல்லாது இருதய பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மட்டுமல்லாது மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
The post உதயநிதி பிறந்தநாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.