இதையடுத்து, 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாளான நேற்று தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து, சிரமப்பட்டு வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து, வரும் 2025 ஜூனில் லண்டனில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) இறுதிப் போட்டியில் ஆட, முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையில் நடந்து வரும் போட்டிகளின் முடிவுகள் மற்றும் ஆஸி – இலங்கையுடனான 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்காவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது இந்தியாவா அல்லது ஆஸியா என்பது முடிவாகும்.
The post முதல் டெஸ்டில் பாக்.கை வென்ற தென் ஆப்ரிக்கா அணி டபிள்யுடிசி இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.