குலசேகரம்: குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது குலசேகரம் அருகே உள்ள மலவிளை பகுதியில் உள்ள ஆதி பெந்தேகோஸ்தே சத்திய சபை. இது 1950ல் சாது தேவநேசன் ஐயா அவர்களால் தொடங்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான விசுவாசிகளுடன் தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்யும் ஆலயமாக மாறியுள்ளது. ஏராளமானோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து நோய்களில் விடுதலை பெற்று செல்கின்றனர். இதற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் கிளை சபைகள் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் வருவதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தின் 75 வது சபை நாள் விழா நாளை நடைபெறுகிறது. சபை நாளை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு பாடல் ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு சபையின் மூத்த போதகர் இயேசுதாஸ் அவர்கள் தேவசெய்தி வழங்குகிறார். மதியம் 12.30 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. இந்த சிறப்பு ஆராதனையில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சபையின் தலைமை போதகர் மற்றும் சபை ஊழியர்கள், விசுவாசிகள் செய்துள்ளனர்.
The post மலவிளை ஆதி பெந்தேகோஸ்தே சத்திய சபை 75வது சபை நாள் நாளை கொண்டாட்டம் appeared first on Dinakaran.