இந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது; மன்மோகன் சிங் மறைவிற்கு வைரமுத்து, ரஜினி இரங்கல்..!!

சென்னை: இந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு வைரமுத்து, ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மன்மோகன் சிங் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

வைரமுத்து இரங்கல்

இந்தியப் பொருளாதாரம்
தன் ஒருசிறகை இழந்துவிட்டது

இந்தியாவை வழிநடத்திய
ஒரு கல்விமேதை
காலமாகிவிட்டார்

அவர் கொண்டுவந்த
தாராளமயமாக்கலுக்குப் பிறகுதான்
செயற்கை சுவாசத்திலிருந்த
இந்தியப் பொருளாதாரம்
சொந்தமாக சுவாசிக்கத் தொடங்கியது

தேசத்தை
நெருக்கடியில் கட்டியாண்ட
நிர்வாகப் புலி அவர்

ஓர் அரசியல்வாதிக்குரிய
அழிச்சாட்டியங்களை எல்லாம்
அவரது கல்வி துடைத்தெறிந்து
கண்ணியவான் ஆக்கியது

உதட்டுக்குத் தெரியாத
அவரது புன்னகை
எனக்கு மிகப் பிடிக்கும்

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல
இந்தியப் பரப்புக்கே
இது ஓர் இழப்பு

அவரது இழப்பை உணரும்
அனைவருக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்

ரஜினி இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு இரங்கல் தெரிவித்தனர்.

The post இந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது; மன்மோகன் சிங் மறைவிற்கு வைரமுத்து, ரஜினி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: