மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஸ்ரீவைகுண்டம் அரசு பொது மருத்துவமனையில் நவீன மருத்துவக் கருவிகள் அமைப்பதுடன், மருத்துவமனையின் புதிய கட்டிடத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று பெயரிடப்படும்” என்று அறிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா.நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: