நாசரேத், டிச. 25: இடையன்விளையில் நாளை(26ம் தேதி) நடைபெறும் ஸ்தோத்திரப் பெருவிழாவில் மோகன் சி.லாசரஸ் கலந்து கொள்கிறார். நாசரேத் அருகே உள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 76வது ஆண்டு ஸ்தோத்திரப் பெருவிழா, நாளை (வியாழக்கிழமை) 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. மூக்குப்பீறி சேகரகுரு ஞானசிங் எட்வின், நாலுமாவடி சேகரகுரு ஆபிரகாம் ரஞ்சித் ஆகியோர் ஆரம்ப ஜெபம் செய்கின்றனர். இம்மானுவேல் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். சிறப்பு பாடல்கள், சாட்சிகள் இடம்பெறுகிறது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு செய்தியளித்து சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். ஏற்பாடுகளை இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் பொறுப்பாளர் பொன்சீலி சாமுவேல் மற்றும் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.
The post இடையன்விளையில் நாளை ஸ்தோத்திரப் பெருவிழா appeared first on Dinakaran.