×

மிதுனம்

மிதுனம்: ராசியில் கூட்டுக் கிரக சேர்க்கை இருப்பதால் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். பிள்ளைகள் செயல்பாடுகள் காரணமாக வருத்தங்கள் வந்து நீங்கும். புதன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். செவ்வாய் அமைப்பு காரணமாக சொத்து விஷயமாக அவசர முடிவுகள் வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் திடீர் இடமாற்றம் காரணமாக சொந்த ஊர் திரும்புவார்கள். மகள் திருமண விஷயமாக உறவினரிடம் இருந்து மகிழ்ச்சியான தகவல் வரும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்கலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் பெண்களுக்கு மளிகைப் பொருட்களை தானமாக கொடுக்கலாம்.

Tags :
× RELATED மிதுனம்