அந்த அறையில் அனைத்து விதமான கருவிகளும் வசதிகளும் இருந்தது. நான் உட்காந்திருந்த இடத்திற்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் நான் விளம்பர பாடல்களை பாடியிருந்தேன். அதனால் டேபில் இருந்த ஐ-பேடில் என்னுடைய பாடலை காண்பிக்கும்படி அவர் கேட்டார். உடனே நான் ஐ-பேடில் அதை தேடிக் கொண்டிருந்தபோது அவர் என் அருகில் வந்தார். நான் அதை பார்த்தேன் இருந்தாலும் ரியாக்ட் செய்யவில்லை. பின்பு அவர் என் ஆடைக்குள் கை வைத்தார். உடனே நான் எதுவும் பேசாமல் எழுந்து வந்துவிட்டேன்.
அதன் பிறகு அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக பேசவில்லை. அழவும் இல்லை. ஏனென்றால் அது அவருடைய தவறு. என்னுடைய தவறில்லை” என்றார். ராஜேஷ் ரோஷன் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் ராகேஷ் ரோஷனின் தம்பி மற்றும் ஹிரித்திக் ரோஷனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.‘ஹிரித்திக் ரோஷன் மீதும் இதேபோல் கங்கனா ரனவத் புகார்கள் கூறினார். அதனால் இந்த புகாரில் உண்மை இருக்குமா’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
The post இசையமைப்பாளர் மீது பாடகி பாலியல் புகார் appeared first on Dinakaran.