புதுடெல்லி: கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், முதல் முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு சென்றுள்ளார்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் துணை தலைவர் காஜா கல்லாஸின் அழைப்பின் பேரில் ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளார். அங்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அப்போது பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
