ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரை தளமாக கொண்ட சினார் ராணுவப்படையின் எக்ஸ் தள பதிவில், ‘‘உளவுத்துறை தகவல் அடிப்படையில் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். பதில் தாக்குதலில் தீவிரவாதி கொல்லப்பட்டான். ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை
- காஷ்மீர்
- ஸ்ரீநகர்
- இந்திய இராணுவம்
- வரி
- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு
- யூரி
- ஜம்மு மற்றும்
- சினார் இராணுவம்
