புதுடெல்லி: மக்களவை சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் சுயநலமானது என்றும், ஜனநாயக நிறுவனங்களை தங்கள் சொந்த குறுகிய எல்லைக்குள் அடைத்து வைக்க விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
