இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி, படிப்படியாக 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை இல்லாததாலும், நீர்வரத்து 2000 கன அடியாக குறைந்ததாலும் உபரிநீர் திறக்கப்படுவது தற்போது 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.40 அடி உயரமாக உள்ளது. ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மழை விட்டநிலையிலும் பல்வேறு ஏரிகளில் இருந்து தண்ணீர் இன்னும் வந்து கொண்டிருப்பதால் உள்ளே வரும் நீரின் அளவைக் காட்டிலும் அதிக அளவு உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும், மழையின் தாக்கம் வரும் நாட்களில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியதன் பேரில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை 21 அடி வரை வைத்து பராமரிக்க முடிவு செய்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.