டபிள்யுபிஎல் டி20 கிரிக்கெட்: 16 வயது வீராங்கனை ரூ.1.60 கோடிக்கு ஏலம்

புதுடெல்லி: பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலத்தில், 16 வயது வீராங்கனை கமாலினி ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக, சிம்ரன் ஷெய்க், குஜராத் ஜையன்ட்ஸ் அணியால் ரூ. 1.90 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். வரும் 2025ல் நடக்கவுள்ள டபிள்யுபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீராங்கனைகளை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜையன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.

ஏலத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான கமாலினியை ஏலம் எடுப்பதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன் அணிகளிடையே பலத்த போட்டி காணப்பட்டது. இறுதியில் அவரை ரூ.1.60 கோடிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஏலத்தில் அதிகபட்சமாக சிம்ரன் ஷெய்க், ரூ.1.90 கோடிக்கு குஜராத் ஜையன்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக, தேந்திர டாட்டின் ரூ.1.70 கோடிக்கு குஜராத் அணியில் சேர்க்கப்பட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிரேமா ராவத்தை ரூ.1.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. சாரணியை ரூ.55 லட்சத்துக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நந்தினி டி கிளெர்க்கை ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலம் எடுத்தன. மேலும் பல வீராங்கனைகளை பல லட்சங்களுக்கு ஐந்து அணிகளும் ஏலத்தில் எடுத்தன.நேற்றைய ஏலத்தில் 19 வீராங்கனைகள், மொத்தம் ரூ. 9.05 கோடிக்கு வாங்கப்பட்டனர். கடந்தாண்டு முதல் முறையாக நடந்த டபிள்யுபிஎல் டி20 இறுதிப் போட்டியில் டெல்லி அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

The post டபிள்யுபிஎல் டி20 கிரிக்கெட்: 16 வயது வீராங்கனை ரூ.1.60 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: