20 வது மணிநேரம் தீவான சரவணபுரம் கிராமம் பால், பூக்களை ரோப் கயிறு கட்டி அனுப்பி வைத்த மக்கள்

பெரம்பலூர் : 2-நாள் பெய்த அடைமழைக்கு 20 மணி நேரம் தீவாகிப் போன சரவணபுரம் கிராமம். உள்ளூர் தன்னார் வலர்கள் ரோப் கயிறுகளை கட்டி கொள்முதல் செய்த பால், அறுவடைசெய்த பூக்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக திகழும் பச்சை மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் மழைக்குப் பிறகு லாடபுரம் பெரிய ஏரி நிரம்பி வழிந்த நிலையில், மாவட்டத்தின் சுற்றுலா அந்தஸ்து கொண்ட மயிலுற்று அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில் 11ம் தேதி இரவுமுதல் நேற்று மதியம் வரை 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கன மழையால் லாடபுரம் அருகே பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகி வரும் ஆணைக்கட்டி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு சென்றது. இதனால் லாடபுரம் பெரிய ஏரிக்கும் பச்சைமலைக்கும் இடையே விவசாயிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டி மாட்டுப் பாதை அடையாளம் தெரியாதபடிக்கு மழைநீர் காட்டாறாக பெருக்கெடுத்து சென்றது.

இதனால் காட்டுக் கொட்டகைகளில் வீடுகட்டு குடியிருக்கும் விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளில் இருந்து பெறப்பட்ட பாலினையும், அந்தப் பகுதிகளில் சம்பங்கி பூ, சாமந்திப்பூ பயிரிட்டு அறு வடை செய்த விவசாயிகள் பூக்களையும் லாடபுரத் திற்கு கொண்டுவர வழி தெரியாமல் விழித்தனர். அதே நேரம் லாடபுரத்திற் கும் சரவண புரத்திற்கும் இடையே உள்ள தரைப் பாலைத்திலும் தண்ணீர் கரைபுரண்டு சென்றது.

இதன் காரணமாக இரண்டு நாட்கள் பெய்த கன மழைக்கு சுமார் 500 பேர் வசிக்கக்கூடிய சரவண புரம் கிராமம் தீவாகிப் போனது. சரவணபுரம் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்ததால் மலையடிவார பகுதிகளில் வயல்களில் வீடுகட்டி வசிப்போர், லாடபுரம் கிராமத்திற்கும் சரவணபுரம் கிராமத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரவணபுரம் இளைஞர்கள் 10 பேர் ஒன்றுசேர்ந்து ரோப் கயிற்றைக் கொண்டு அப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், கால் நடைகளும், வண்டி மாட்டுப் பாதையை கடந்து செல்ல வும், பால் மற்றும் பூக்களை கொண்டு செல்லவும் உதவிசெய்தனர். நேற்று காலை 6மணிமுதல் பகல் 12 மணி வரை அங்குள்ள இளைஞர்கள், விவசாயிக ளும் பொதுமக்களும், பெண்களும் காட்டாற்று தண்ணீரை கடந்து செல்ல உறவினர். இதனால் சரவ ணபுரம் கிராமம் 20 மணி நேரம் தீவாக இருந்துப் பிறகு மீண்டது.

இது தொடர்பாக அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கையில், ஆணைக்கட்டி ஆறு, பெரிய ஏரிக்கு வரக்கூடிய இடைப்பட்ட பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டிமாட்டு பாதையிலும், லாடபுரம் சரவணபுரம் இடையே உள்ள தரைப் பாலத்திலும் மேம்பாலங்கள் அமைத்து. தரவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்து பெய்யும் கனமழைக்கு உயிரிழப்புகள் நேர்வதை தடுக்க முடியாது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேணடுமென தெரிவித்துள்ளனர்.

The post 20 வது மணிநேரம் தீவான சரவணபுரம் கிராமம் பால், பூக்களை ரோப் கயிறு கட்டி அனுப்பி வைத்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: